நமது இந்தியாவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சியில் உணவிற்கு பின் பீடா வழங்கப்படுகிறது.இந்த பீடாவானது குல்கந்து,கற்கண்டு,ஜெர்ரி போன்றவற்றை வெற்றிலையில் வைத்து தரப்படும் ஒரு பொருளாகும்.
தென் இந்தியர்களைவிட வட இந்தியர்கள் இந்த பீடா போடும் பழக்கத்தை அதிகம் கொண்டிருக்கின்றனர்.நன்றாக சாப்பிட்ட பிறகு அவை சீக்கிரம் செரிமானமாக இந்த பீடா உதவும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.சிலருக்கு எந்த வகை உணவு சாப்பிட்டாலும் பீடா போடுவதை விரும்புகின்றனர்.
தற்பொழுது பீடா போடுவதை பலர் கலாச்சாரமாக மாற்றிவருகின்றனர்.உண்மையில் பீடா உடலுக்கு நல்லதா என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.சிலவகை பீடாக்களில் ஏலக்காய்,புதினா போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகிறது.இது வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.இவ்வகை பீடாக்கள் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பீடா மெல்வதால் சாப்பிட்ட உணவு சீக்கிரம் செரிமானமாகும்.அதேபோல் பீடா போடுவதால் பசி கட்டுப்படும்.இந்த பீடாவில் நார்ச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இதை சாப்பிடும் பொழுது பசி ஏற்படுவது குறையும்.இதனால் உடல் எடை சீக்கிரம் குறைய வாய்ப்பிருக்கிறது.பீடாவை மெல்வதால் ஒருவித புத்துணர்ச்சி உடலுக்கு கிடைக்கும் என்று நம்பப.படுகிறது பான் பீடாவில் தாதுக்கள்,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதை போட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பான் பீடா போடுவதால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.இருப்பினும் பீடாவில் அதிக இனிப்பு இருப்பதால் அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.பீடாவில் உள்ள ரோஜா குல்கந்து,வெள்ளை சர்க்கரை,கற்கண்டு போன்றவரை இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.
எனவே இரத்த சர்க்கரை பிரச்சனை இருப்பவர்கள் பீடாவை தவிர்ப்பது நல்லது.பீடாவை தவிர்க்க முடியாதவர்கள் இனிப்பு குறைவான பீடா போடுவது நல்லது.