எவ்வளவு சாப்பிட்டாலும் நோஞ்சான் போல் இருப்பவர்கள்.. வறுத்த எள்ளை இப்படி சாப்பிட்டால் ஒரே மாதத்தில் உடல் எடை கூடிவிடுவார்கள்!!

Photo of author

By Divya

எவ்வளவு சாப்பிட்டாலும் நோஞ்சான் போல் இருப்பவர்கள்.. வறுத்த எள்ளை இப்படி சாப்பிட்டால் ஒரே மாதத்தில் உடல் எடை கூடிவிடுவார்கள்!!

இக்காலத்தில் உடல் கூடுகிறது என்று குறைவாக சாப்பிடுபவர்கள் ஒரு டைப் என்றால் வயிறு முட்ட சாப்பிட்டும் உடல் எடை கூடாமல் நோஞ்சான் போல் இருக்கிறேன் என்று வருத்தப்படுவார்கள் மற்றொரு டைப்.ஒல்லியோ,குண்டோ நீங்கள் எப்படி இருந்தாலும் இந்த உலகம் உங்களை குறை கூறிக் கொண்டே தான் இருக்கும்.

ஆனால் உங்கள் உடல் தேகம் ஒல்லியாகவோ,குண்டாக இருந்தால் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.நீங்கள் காபி,டீ போன்ற சூடான பானங்களை குடித்த உடனே மலம் கழிக்கும் நிலை ஏற்பட்டால் நீங்கள் உண்ணும் உணவிற்கான சத்துக்கள் உடலில் தங்காது.இதனால் உடல் தேறாமல் போதல் போன்ற கடுமையான உடல் உபாதைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.எனவே ஒல்லியான உடலின் எடையை அதிகரிக்க எள் உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வாருங்கள்.

ஒல்லியான உடல் எடையை அதிகரிக்க வழிகள்:

1)எள்
2)வெல்லம்
3)வேர் கடலை

செய்முறை:-

ஒரு கைப்பிடி வேர்க்கடலையை வாசனை வரும் அளவிற்கு வறுத்து ஆற விடவும்.பிறகு 50 கிராம் எள்ளை ஒரு நிமிடத்திற்கு வறுத்து ஆறவிடவும்.

அதன் பின்னர் 50 கிராம் வெல்லத்தை இடித்து தூளாக்கி கொள்ளவும்.பின்னர் வறுத்த வேர்க்கடலை மற்றும் எள்ளை மிக்ஸி ஜாரில் கொட்டி அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.இந்த பவுடரை வெல்லத் தூளில் மிக்ஸ் செய்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தினமும் ஒன்று என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு
2)பிஸ்தா பருப்பு
3)முந்திரி பருப்பு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 100 கிராம்
பாதாம் பருப்பு,100 கிராம் பிஸ்தா பருப்பு மற்றும் 100 கிராம் முந்திரி பருப்பு போட்டு மிதமான தீயில் வறுத்து அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 150 மில்லி பால் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பின்னர் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் தேறாத உடலும் தேறும்.