நடிகையின் செல்போன் எண்ணை இணையத்தில் பரவவிட்ட நபர்கள்! கேரளா ஸ்டோரி திரைப்படமும் இது மாதிரிதான் என நடிகை பேட்டி!
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த நடிகை அடா ஷர்மா அவர்களின் செல்போன் எண்ணை அடையாளம் தெரியாத நபய்கள் இணையத்தில் பரவவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் நடிகர் பிரபுதேவா நடித்த சார்லி சாப்லின் 2 திரைப்படத்தில் நடித்தவர் நடிகை அடா சர்மா. இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்த நடிகை அடா சர்மா அவர்கள் கடந்த மே மாதம் 5ம் தேதி வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடித்த இவருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தில் நடித்த நடிகைக்கு மிரட்டல்கள் வந்தது. இதையடுத்து இவரது செல்போன் எண்ணை அடையாளம் தெரியாதவர்கள் இணையத்தில் பரவ விட்டுள்ளதாக நடிகை அடா சர்மா அவர்கள் கூறியுள்ளார்.
இது குறித்து நடிகை அடா சர்மா அவர்கள் “சில தினங்களுக்கு முன்னர் என்னுடைய செல்போன் எண்ணை சில விஷமிகள் இணையத்தில் கசிய விட்டனர். இதன் விளைவாக பலர் என்னை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசினர். ஒரு பெண்ணின் செல்போன் நம்பயும் மார்பிங் செய்த ஆபாச புகைப்படங்களும் இணையத்தில் வெளியானால் மனம் எந்த அளவுக்கு அவதிப்படும் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகை அடா சர்மா அவர்கள் “தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திலும் ஒரு பெண்ணின் செல்போன் நம்பர் இணையத்தில் வெளியாகும் பொழுது அந்த பெண் அடையும் வேதனைகளை காட்டியுள்ளனர். அதனை எனக்கு ஏற்படுத்திய சம்பவம் நினைவு படுத்தியது. எனது செல்போன் எண்ணை இணையத்தில் வெளியிட்ட நபர் நிறைய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் அறிவித்துள்ளனர்” என நடிகை அடா சர்மா கூறியுள்ளார்.