சீமானின் செயலால் நெகிழ்ந்து போன மக்கள்!! சட்டென களத்தில் இறங்கிய தம்பிகள்!!

Photo of author

By CineDesk

சீமானின் செயலால் நெகிழ்ந்து போன மக்கள்!! சட்டென களத்தில் இறங்கிய தம்பிகள்!!

சீமான் எப்பொழுதும் ஒரு தனித்துவம் படைத்த அரசியல்வாதி ஆவார். அவரின் பேச்சிலும், பிரச்சாரத்திலும், அறிக்கையிலும் அவரது தனித்துவத்தையும், மக்களையும் மற்றும் மண்ணையும் மேம்படுத்துவது  பற்றியுமானதகவே இருக்கும். அந்த வகையில் சீமான் தற்போது தனது கட்சி உறுப்பினர்களுக்கு அற்றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது கோடைக்காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைக்கின்றது.

அக்னி நட்சத்திரம் வேறு ஆரம்பமாக போகிறது. எனவே தான் தம்பிகள் ஒரு வேண்டுகோள் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தண்ணீர் பந்தல் அமைக்குமாறும் பிற கட்சிக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்குமாறும் கூறியுள்ளார். இதைதொடர்ந்து மேலும் பறவைகளுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் மக்கள் தங்களின் வீட்டில் அல்லது மாடியில் தண்ணீர் தொட்டிகளை அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது வரையில் யாருமே பறவைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்குமாறு அறிக்கை விடவில்லை. இதனால் நெகிழ்ந்து போன சீமானின் தம்பிகள் அனைவரும் களத்தில் இறங்கி அனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் தொட்டி அமைத்து வருகின்றனர். இதுவரையில் மனிதர்களுக்கு மட்டுமே தண்ணீர் பந்தல் காணப்பட்ட நிலையில் தற்போது மற்ற ஜீவராசிகளுக்கும் தண்ணீர் தொட்டி அங்காங்கே தென்பட தொடங்கியுள்ளது. இதனால்  சீமான் மீது  மக்களிடையே பெரும் மதிப்பு அதிகரித்துள்ளது.