இன்று பெரும்பாலான மக்கள் நின்ற நிலையில் தான் அதிகமான வேலைகளை பார்க்கின்றனர்.தினமும் அதிக நேரம் நின்று வேலை பார்ப்பவர்களுக்கு உடலளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆண்,பெண் அனைவருக்கும் நின்றபடி வேலை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது.பெண்கள் சமையல் கட்டில் நெடு நேரம் நின்றபடி வேலை பார்க்கின்றனர்.தொடர்ந்து நின்றபடி வேலை பார்ப்பவர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அதை கவனிக்க தவறினால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக நேரம் நின்றபடி வேலை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:
1)கால் பகுதியில் வீக்கம்
தொடர்ந்து அதிக நேரம் நின்றபடி வேலை பார்ப்பவர்களுக்கு கால் பகுதியில் அதிகமான வலி மற்றும் வீக்கம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.தொடர்ச்சியாக நிற்காமல் சிறிது நேரம் அமர்வது,நடப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டும்.
2)வெரிகோஸ் வெயின்
தினமும் அதிக நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின் என்ற நரம்பு பிரச்சனை ஏற்படும்.பாதங்களில் அழுத்தம் ஏற்படுவதால் இந்த பாதிப்பு உண்டாகிறது.
3)தசை தளர்வு
நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு கால் தசை தளர்வு ஏற்படும்.இதனால் நிற்பதில் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
4)முதுகு வலி
அதிக நேரம் நின்று வேலை செய்தால் முதுகு வலி பாதிப்பு ஏற்படும்.அதிக நேரம் நிற்பதால் முதுகு தண்டுவடம் கடுமையான பாதிப்பை சந்திக்கிறது.
5)முதுகெலும்பு பிரச்சனை
நீண்ட நீரம் நின்றபடி வேலை செய்து வந்தால் முதுகெலும்பு பிரச்சனை ஏற்படும்.எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
6)மூட்டு வலி
தினமும் நின்றபடி பல மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு மூட்டு வலி பாதிப்பு கூடிய விரைவில் வந்துவிடும்.
எனவே நின்றபடி வேலை பார்ப்பவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க தினமும் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.செவ்வாழையில் மெக்னீசியம்,பொட்டாசியம்,வைட்டமின் சி,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த செவ்வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி பாலில் கலந்தும் சாப்பிடலாம்.அல்லது தேன் சேர்த்து சாப்பிடலாம்.தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நின்றபடி வேலை செய்வதால் வரும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடலாம்.