மக்களே இந்த தடையை மீறினால் ரூ 1 லட்சம் அபராதம் மற்று சிறை!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
193
All of these items are banned from July 1st! Federal Government Announces Action!
All of these items are banned from July 1st! Federal Government Announces Action!

மக்களே இந்த தடையை மீறினால் ரூ 1 லட்சம் அபராதம் மற்று சிறை!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தற்போது நாடு முழுவதும்  ஆக்ரமித்து  வரும் பொருட்களில் முதன்மையக உள்ள பொருள் பிளாஸ்டிக். நாடு முழுவதும் அனைவரும் அவரவர்களின் வேலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நேரத்தை சேமிக்கும் வகையில்  ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி  எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் ஏற்படும் தீமைகளை அறிந்தும் தொடர்ந்து இதனையே பயன்படுத்தும்  வழக்கமாக கொண்டுள்ளனர்.

  பிளாஸ்டிக் பொருட்களை ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு  தூக்கி எறியப்படும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யமுடியாது. நகரப் புறங்களில் வெளிப் பகுதிகளில் பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் குவியலாக கிடைக்கின்றது.ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது.மேலும் மத்திய மாநில அரசானது பலமுறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இந்த ஒரு செயலை மட்டும் தடுக்க முடியவில்லை.

தற்போது ஜூலை 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக பிளாஸ்டிக் சம்மந்தப்பட்ட பொருட்களை பயன்படுத்தக்க்கூடாது  என்ற கட்டுப்பாட்டை  பொதுமக்கள் வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்ட  பொருட்களின் வரிசையில் பலூன், ஸ்டிக்ஸ் ,கப்க,ள் டிரேபர் ஏண்டி மற்றும் ஐஸ் கிரீம் ஸ்டிக் இன்விடேஷன் கார்டு அலங்காரத்திற்காக பயன்படுத்தும் பாலிஸ்டிரீன் மற்றும் நூறு மைக்ரானுக்கு கீழான பிவிசி பேனர் ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். இந்த பொருட்கள் அனைத்தும் பயன்படுத்தினால் கட்டாயமாக அபராதம் எனவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

Previous articleபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோர்ட்டில் வேலையா! இதோ முழு விவரங்கள்
Next articleசென்னையில் இந்த கடைகளுக்கெல்லாம் சீல்! காவல் ஆணையர் வெளியிட்ட செய்தி!