சட்டப்பேரவையில் உண்மையை மறைத்த அதிமுக! அமைச்சர் சுப்பிரமணியன் கடும் குற்றச்சாட்டு!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மிக தீவிர நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட வருகிறது. அதிலும் மாநில அரசு இந்த நோய்த்தொற்றை கட்டுப் படுத்தும் விதத்தில் தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாகவே செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். அதோடு சென்ற 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இந்த முகாமில் இருபத்தி எட்டு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார். அதோடு தற்போது இந்த தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்தில் இருப்பது உத்தரபிரதேச மாநிலம் தான். அதனை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதல் இடத்திற்கு வர வேண்டும் அதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உரையாற்றும்போது நோய்தொற்று சோதனை மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பி அதன் ஒரு மாற்றம் தொடர்பான ஆய்வு செய்ய ஒரு சோதனைக்கு 5,000 ரூபாய் செலவாகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இந்த ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு தற்சமயம் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் மாநில அரசின் காரணமாக, மரபும் பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப் பட்டது இல்லை. முதன்முதலாக தமிழக அரசால் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டு இருக்கிறது என கூறியிருக்கிறார் சுப்பிரமணியன்.

நோய்த்தொற்று பாதித்த ஒரு சில மாணவர்கள் தற்சமயம் உடல்நலத்துடன் இருக்கிறார்கள் மாணவர்களிடையே எந்தவிதமான பயமும் இருப்பதாக தெரியவில்லை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறப்பு தொடர்பான முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக சொன்னதைப்போல பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சென்ற ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியது சட்டசபையில் அவர்கள் மறைத்து விட்டார்கள் என குற்றம் சுமத்தி இருக்கிறார்.

நீட் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம் என்று துறை சார்பாக முடிவு செய்யப்பட்டது. ஆட்சிக்கு வந்து முதல் சட்டசபைக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என்று தான் நாங்கள் தெரிவித்து இருந்தோம். ஏற்கனவே அனுப்பப்பட்ட மசோதாவிற்கும் தற்சமயம் நிறைவேற்றப்பட்டு இருக்கிற மசோதாவுக்கு வேறுபாடு இருக்கிறது. சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மா. சுப்பிரமணியன் கூறியிருக்கின்றார்