இன்றைய வானிலை நிலவரம் சென்னை வானிலை! ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

0
85

தமிழகத்தில் ஒரு சில வாரங்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதோடு பருவமழை உள்ளிட்ட காரணங்களால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.அதோடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கட்டுகளில் நீர் சேர்வதாலும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதோடு ஏற்கனவே மேட்டூர் உள்ளிட்ட அணைகள் நல்ல நீர் மாற்றத்துடன் காணப்படுகின்றது.

இதனால் காவிரி டெல்டா பகுதியைச் சார்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். அத்தோடு கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரும் அவ்வப்போது திறந்து விடப்படுவதால் இந்த முறை விவசாயிகள் நல்ல லாபத்தை பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது மற்றும் மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக் கூடிய தென்காசி, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்கள் அதனை சுற்றி இருக்கக்கூடிய உள் மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி,நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

நாளைய தினம் கோவை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

எதிர்வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் எனவும், மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது