கண் குறைபாடு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பாருங்கள்! இரண்டு ஏலக்காய் இருந்தால் மட்டும் போதும்!
கண் குறைபாடு என்பது தற்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருந்து வருகின்றது. குழந்தைகள் அதிக அளவில் செல்போன் பார்ப்பதால் இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. கண்புரை, குளுக்கோமா, கிட்ட பார்வை, தூரப்பார்வை அனைத்தும் அடங்கும். கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறி முதலில் கண் மங்கலாக தெரிவது தான். அவ்வாறு ஏற்பட்டால் ஆரம்ப காலத்திலேயே அதற்கான முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமாக கண் பார்வை உள்ளவர்களுக்கு 200 அடி தூரத்தில் உள்ள பொருட்கள் கூட தெளிவாக தெரியும் என கூறப்படுகிறது. ஆனால் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு 20 அடி தூரத்தில் உள்ள பொருட்கள் கூட மங்கலாக தான் தெரியும். அதற்கான சிறந்த மருத்துவம் என்ன என்பதை காணலாம். அதற்கு இரண்டு ஏலக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயில் விட்டமின் ஏ உள்ளது. அதிகளவு பீட்டா கரோட்டின் உள்ளது. இந்த இரண்டுமே கண் பார்வையை அதிகரிக்க பெரிதளவில் உதவுகின்றது. ஏலக்காய் சாப்பிட்டு வர நம்முடைய பார்வைக்கு செல்லக்கூடிய நரம்புகளை வலுப்படுத்தும்.
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வெப்பத்தால் பலருக்கும் கண் பார்வை மங்கலாகத் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு கண்ணில் எரிச்சல் ,அரிப்பு போன்றவை ஏற்படும். இவற்றைத் தவிர்த்து கண் பார்வை நரம்புகளை குளிர்ச்சி அடைய முக்கிய பங்கு வகிப்பது ஏலக்காய். இரண்டு ஏலக்காயை எடுத்து கொண்டு அதனை உடைத்து அதில் உள்ள விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தூய்மையான ஒரு டீஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்த தேனில் ஏலக்காய் விதையை சேர்க்க வேண்டும். அதனை அப்படியே நன்கு மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர கண்ணிற்கு புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. மேலும் கண்பார்வை மேம்பட சில கண் பயிற்சி செய்ய வேண்டும். முதலில் கண்ணின் கருவிழியை இடது ,வலது ,மேற்புறம், கீழ்புறம் என அசைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்ணிற்கு ஏற்படும் அழுத்தம் குறைந்து கண் பார்வை மேம்படும். அதன் பிறகு வெந்நீரில் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து அதன் தண்ணியை குடித்து வர கண் பார்வை மேம்படும்.