அதிக புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களில் ஒன்று முட்டை.தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு சுமார் 6 கிராம் அளவிற்கு புரதச்சத்து கிடைக்கிறது.முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
ஆனால் அளவிற்கு அதிகமாக முட்டையை கொண்டால் அது உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.குறிப்பாக இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு முட்டை சிறந்த உணவு அல்ல.முட்டையின் மஞ்சள் கருவில் அதிகப்படியான கொழுப்புச்சத்து நிறைந்திருப்பதால் இதை உட்கொள்ளும் போது இதய நோய்,டயப்டீஸ் உள்ளிட்ட நோய்கள் வரக் கூடும்.
அதிகளவு முட்டை உட்கொண்டால் வயிறு வலி,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,செரிமானப் பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.தொடர்ந்து முட்டையை அதிகளவு உட்கொண்டால் இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகள் ஏற்படும்.
அளவிற்கு அதிகமாக முட்டையை உட்கொள்வதால் மலச்சிக்கல்ஏற்படும்.சிலருக்கு அஜீர்ணக் கோளாறு மற்றும் வயிற்று வலி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.முட்டையில் உள்ள வைட்டமின்கள்,தாதுக்கள் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க செய்துவிடும்.இதனால் சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முட்டையில் உள்ள கொழுப்புச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து மாரடைப்பு,இருதய நோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.எனவே முட்டை ஆரோக்கியத்திற்கு உகந்தது என்றாலும் அதை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.இதய நோயாளிகள,சர்க்கரை நோயாளிகள்,கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.