சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களா? இந்த உணவுகளை தொடவே கூடாது!
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இந்த சிறுநீரக பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் நாம் தினமும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது. தண்ணீர் குடிக்காமல் இருப்பதனால் சிறுநீரில் பி எச் அளவு மாறுபடுகிறது. இதனால் சிறுநீரகங்களில் வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் சிறுநீரகங்களில் தேங்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சிறுநீரகங்களில் கல் ஏற்பட தொடங்குகிறது.இந்த சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் ஐ ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இந்த ஆக்சிலேட் எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கிறதோ அந்த உணவுகளை சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. கீரைகள், வெண்டைக்காய், கத்தரிக்காய், வெங்காயம், பீட்ரூட், போன்றவைகளில் அதிக அளவு ஆக்சிலேட் நிறைந்துள்ளது. பீன்ஸ் வகைகள் ஆன சோயாபீன்ஸ், பச்ச பீன்ஸ், இவைகளில் அதிக அளவு உள்ளது. கிழங்கு வகைகள் ஆன உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, போன்ற அனைத்து வகையான கிழங்குகளிலும் ஆக்சிலேட் மிகுந்துள்ளது. மேலும் பிளாக் டீ ,ஐஸ்கிரீம் ,சாக்லேட் ,கூல் ட்ரிங்ஸ், போன்றவைகளிலும் அதிக அளவு நிறைந்துள்ளது.
சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் நாம் சாப்பிடும் உணவில் குறைந்த அளவு ஆக்சிலேட் கொண்ட உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பப்பாளி பழம், வாழைப்பழம், ஸ்ட்ராபெரி, முலாம்பழம், திராட்சை, அன்னாச்சி பழம், போன்ற பழங்களில் ஆக்சிலேட் குறைவாக உள்ளது.
மேலும் காய்கறிகளில் முட்டைகோஸ், காலிபிளவர், குடைமிளகாய், பாகற்காய், வெள்ளரிக்காய், தேங்காய், நூக்கல், போன்ற காய்கறிகளில் ஆக்ஸிலேட் குறைந்த அளவு காணப்படுகிறது.
மேலும் சிறுநீரகங்களில் கற்கள் உள்ளவர்கள் கால்சியம் அதிக அளவு இருக்கும் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் குறைவாக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் பன்னீர், சோயா பீன்ஸ் ,கீரைகள், பாதாம் இவைகளில் கால்சியம் அதிக அளவு இருப்பதனால் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதனை குறைந்த அளவு எடுத்துக் கொண்டால் போதுமானது.