கருமை நிறத்தில் கசப்பு சுவை நிறைந்த கருஞ்சீரகம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.கருஞ்சீரகம் புற்றுநோய் செல்களை அழிக்கும் குணம் கொண்டவையாகும்.கருஞ்சீரகத்தை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கருஞ்சீரக பானம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.கருஞ்சீரகத்தை வறுத்து பொடித்து டீ போட்டு குடித்து வந்தால் சளி,இருமல்,ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் குணமாகும்.எலும்பு ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு கப் கருஞ்சீரக டீ செய்து குடித்து வந்தால் உடல் ஆற்றல் அதிகரிக்கும்.
தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாக கருஞ்சீரகத்தில் டீ செய்து குடிக்கலாம்.முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு கிளாஸ் கருஞ்சீரக பானம் பருகலாம்.மூளை ஆரோக்கியம் மேம்பட கருஞ்சீரக பொடியை சாப்பிடலாம்.
கருஞ்சீரகத்தை அரைத்து பசை போல் மாற்றி மூட்டு மீது தடவினால் வலி,வீக்கம் குணமாகும்.சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த கருஞ்சீரக டீ குடிக்கலாம்.
உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரைய பெருஞ்சீரக டீ செய்து குடிக்கலாம்.சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.மாதவிடாய் கோளாறு இருக்கும் பெண்கள் கருஞ்சீரகத்தில் டீ செய்து குடிக்கலாம்.மாதவிடாய் வயிற்று வலி குணமாக கருஞ்சீரக பொடி சாப்பிடலாம்.சர்க்கரை நோய்,குடற்புழு போன்ற பாதிப்புகள் குணமாக கருஞ்சீரகம்’ஊறவைத்த தண்ணீரை பருகலாம்.
கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
உடல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பயன்படும் கருஞ்சீரகத்தை சிலர் உட்கொள்ளும் பொழுது அது ஆபத்தாக மாறிவிடுகிறது.குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்கள் கருஞ்சீரகத்தை உட்கொள்ளக் கூடாது.
குறை இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை உட்கொள்ளக் கூடாது.கருத்தரித்த பெண்கள் கருஞ்சீரகத்தை தவிர்க்க வேண்டும்.