நம் அன்றாட வாழ்க்கையில் டீ,காபி,பால் போன்ற சூடான பானங்களை பருகுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவரும் டீ,காபி போன்ற பானங்களை அதிகமாக பருகுகின்றனர்.
இந்த பானங்களை பருகினால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்,தலைவலி பாதிப்பு குறையும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கையாக இருக்கிறது.ஆனால் டீ,காபியை அதிகமாக குடித்தால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.
மேலும் உடலில் சில நோய் பாதிப்புகள் இருந்தால் நிச்சயம் டீ,காபியை சாப்பிடக் கூடாது.அப்படி உடலில் எந்தெந்த பாதிப்பு இருப்பவர்கள் டீ,காபி குடிக்க கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
1)உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் டீ,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் பிபி அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
2)இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் டீ,காபியை குடிக்க கூடாது.இதனால் இதய நோய் தீவிரமடைந்துவிடும்.
3)தூக்கமின்மை பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் டீ,காபி குடிக்க கூடாது.இதனால் தூக்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும்.
4)கர்ப்பிணி பெண்கள் டீ,காபி குடிக்க கூடாது.காஃபின் நிறைந்த பானங்கள் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.
5)செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் டீ,காபி போன்ற காஃபின் பானங்களை தவிர்க்க வேண்டும்.இதுபோன்ற பானங்கள் செரிமான மண்டல ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.
6)உடலில் அதிக பித்தம் இருப்பவர்கள் டீ,காபி குடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் டீ,காபியை குறைவான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
7)இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருபவர்கள் டீ,காபி போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும்.குடல் சம்மந்தபட்ட பிரச்சனை இருப்பவர்கள் டீ,காபி பருகுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
8)வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் பிரச்சனை இருப்பவர்கள் காபி,டீ போன்ற சூடான பானங்களை தவிர்க்க வேண்டும்.அதேபோல் அல்சர் பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் இந்த பானங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்.