கழுத்து பகுதியில் உள்ள தைராய்டு ஹார்மோன் சுரப்பி அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ தைராய்டு பிரச்சனை உண்டாகும். ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் உணவுப் பழக்கங்களால் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது.
தற்பொழுது பெண்களிடையே அதிகரித்து வரும் ஒரு முக்கிய பிரச்சனையாக தைராய்டு உள்ளது.ஹைப்போ மற்றும் ஹைப்பர் என்று இருவகை தைராய்டு பாதிப்புகள் இருக்கின்றது.உணவுமுறை மூலம் தைராய்டு பாதிப்பை எளிதில் குணமாக்கி கொள்ள முடியும்.
தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1)வெள்ளை சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும்.இதனால் தைராய்டு சுரப்பி அதிகரித்துவிடும்.
2)பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இறைச்சிகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
3)கடலை எண்ணெய்,கடுகு எண்ணெய்,சூரியகாந்தி எண்ணெயை முழுமையாக தவிர்க்க வேண்டும்.இதற்கு மாற்று தேங்காய் எண்ணெய்,நெய்,வெண்ணெய் போன்ற்வற்றை பயன்படுத்தலாம்.
4)சோயா உணவுகளை அளவோடு உட்கொள்ள வேண்டும்.பால் பொருட்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:
1)நார்ச்சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2)பாகற்காய்,பூசணிக்காய்,காளான் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
3)கொத்தமல்லி விதையை கொதிக்க வைத்து அருந்த வேண்டும்.வைட்டமின் ஏ,சி மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.