பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவில் பிரதோஷ வழிபாடு!குடும்ப பிரச்னைகள் தீரும் என ஐதீகம்!
பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் வைகாசி விசாகம் பிரதோஷத்தை முன்னிட்டு அரளி பூ, செம்பருத்தி பூ, மல்லிகைப்பூ, ஜாதி பூ, தாமரைப்பூ ஆகிய பூக்களை கொண்டு சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும், நந்திக்கும், முருகனுக்கும், நாகராஜனுக்கும் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது . அருள்மிகு ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோயில் ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் பிரத்யேக சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த கோவிலில் உள்ள அதிகார நாகராஜனுக்கும், நந்தீஸ்வரருக்கும் வைகாசி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் சிவனுக்கும் அதிகாரநந்தீஸ்வரருக்கும் தாமரைப்பூ, ரோஜாப்பூ ,அரளிப்பூ, மல்லிகை பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.நந்தீஸ்வரருக்கும் சிவனுக்கும் பால் அபிஷேகம் , சந்தனபிஷேகம், தயிர் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், செந்துருக்கம் அபிஷேகம், நெய் அபிஷேகம், தேன் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் மற்றும் பல அபிஷேகங்கள் நடைபெற்றன.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிரதோஷத்தை முன்னிட்டு தயிர் சாதம், வெண்பொங்கல், புளி சாதம், சக்கரை பொங்கல், லெமன் சாதம் ஆகியவைகளை வைத்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இந்த வைகாசி விசாகம் பிரதோஷத்தில் முருகனுக்கும் சிவனுக்கும் அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் தொழில்கள் நல்ல முறையில் நடைபெறும், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.