இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் மூன்று போட்டியில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் மூன்றாவது போட்டியின் எதிர்பார்ப்பானது உச்சகட்டத்தில் இருந்தது. இந்தப் போட்டி மழையின் நடுவே நடைபெற்றதால் இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மேலும் இந்த தொடரில் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுக்கு பதிலாக கே எல் ராகுல் களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ரோஹித் சர்மா ஆறாவதாக களமிறங்கி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் மீண்டும் ரோகித் சர்மா முதலாவதாக களமிறங்க வேண்டும் என்ற கருத்துக்களும் எழுந்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கே எல் ராகுலுக்கு ஆதரவாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் நான் கே எல் ராகுலை நம்புகிறேன். அவர் இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரராக நிச்சயம் இருப்பார். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நன்றாக தெரியும் அதனால் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்று அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படாமல் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பளிக்க பட வேண்டும். அவர் இனி வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். என்று கே எல் ராகுலுக்கு ஆதரவாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.