தொப்பை முழுமையாக நிரந்தரமாக குறைய இதை குடித்தால் போதும்!

0
309

தொப்பை முழுமையாக நிரந்தரமாக குறைய இதை குடித்தால் போதும்!

நாம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் கிடையாது. அனைத்தும் சரியாக இருக்குமானால் தொப்பை மட்டும் தொங்கிக்கொண்டிருக்கும்.

இதனை எப்படி சரி செய்யலாம் என நினைத்து நினைத்தே பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். எத்தனையோ வழிமுறைகளை பயன்படுத்தி பயன் தரவில்லையா? ‌ இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ் இதனை நீங்கள் பயன்படுத்தி வரும் போது உங்களது இடுப்பின் அளவு குறைவதை நீங்களே காண முடியும்.

தேவையான பொருட்கள்:
1. சுடுதண்ணீர்
2. எலுமிச்சை பழம்
3. சீரகத் தூள்
4. கருவேப்பில்லை தூள்
5. தேன் தேவைக்கேற்ப்ப

செய்முறை:
1. முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

2. நன்கு கொதித்த தண்ணீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை பழ ஜூஸை கலந்து கொள்ள வேண்டும்.

3. அதனுடன் கால் டீஸ்பூன் சீரகத் தூள் சேர்க்க வேண்டும்.(சீரகத்தை லேசாக தீயில் வறுத்து கருக விடாமல் அதனை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்).

4. மேலும் அதனுடன் கால் டீஸ்பூன் கறிவேப்பிலை தூள் சேர்க்க வேண்டும்.(கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும்).

5. இப்போது அந்த தண்ணீரை நன்றாகக் கலந்து மூடி வைக்கவேண்டும். 5 நிமிடம் அப்படியே இருக்க வேண்டும்.

6. இதனுடன் தேவைக்கேற்ப தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை:

இதனை காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு சுடுதண்ணீரை ஒரு டம்ளர் குடித்து விட்டு, அதன் பிறகு இந்தத் தண்ணீரை 7 நாட்கள் வரை குடித்து வர உங்களது இடுப்பின் அளவு குறையும். நீங்களே இதனை சோதித்துப் பார்க்கலாம்.

இது உங்கள் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும் தன்மை கொண்டது. நிச்சயமாக பயன்படுத்தி பாருங்கள் இது நல்ல தீர்வாக உங்களுக்கு அமையும்.

Previous articleஇல்லத்தரசிகளுக்கு பயன்படும் அசத்தலான வீட்டு குறிப்புகள்!!
Next articleபல்வலியை நொடியில் போக்கும் வீட்டு வைத்தியம்!