இந்த எண்ணெய் போதும்! வெள்ளை முடிக்கு நிரந்தரமாக தீர்வு!
முடி கருப்பாக அழகாக அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது அனைவருடைய ஆசையே. அப்படி இளநரை அல்லது முதுநரை வந்து விட்டால் எப்படி அதை கருமையாக மாற்றுவது என்பதை பற்றிதான் இந்த பதிவில் அதை பார்க்க போகின்றோம். இந்த எண்ணெயை தினமும் நீங்கள் பயன்படுத்தி வரும் பொழுது உங்களது வெள்ளை நரை முது நரை இளநரை ஆகியவை மறைந்து முடி வேர்க் கால்களில் விழுந்து கருமையாக வளரும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இப்பொழுது அந்த எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1. பீர்க்கங்காய் 1
2. தேங்காய் எண்ணெய்
செய்முறை:
1. முதலில் ஒரு பீர்க்கங்காயை எடுத்துக் கொள்ளவும்.
2. அதை எந்த தோலும் நீக்காமல் உள்ளே உள்ள சோற்றையும் நீக்காமல் அப்படியே துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
3. இந்த பீர்க்கங்காயை நிழலில் ஒரு இரண்டு நாட்கள் காய வைக்கவும்.
4. நன்கு காய்ந்து மொரு மொரு என்று ஆகிவிடும்.
5. இப்பொழுது ஒரு வானொலி சட்டியில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும்.
6. 50 மில்லி தேங்காய் எண்ணெய்க்கு ஒரு பீர்க்கங்காய் என்கின்ற அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
7. தேங்காய் எண்ணெய் நன்கு காய்ந்ததும் உலர்த்தி வைத்த பீர்க்கங்காயை போட்டுக் கொள்ளவும்.
8. கருகாமல் பீர்க்கங்காய் பொன்னிறமாக ஆகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
9. இப்பொழுது எண்ணெயை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
10. இந்த எண்ணெயை நீங்கள் கல்லூரி அல்லது ஆபீஸ் செல்லும்போது வைத்துக்கொள்ளலாம். எந்த ஒரு மணமும் வராது.
11. ஒரு சிலர் எண்ணெய் வைத்து கொண்டு செல்ல மாட்டார்கள். அவர்கள் இரவில் நன்கு எண்ணையை தலைக்கு வேர்க்கால்களில் படும்படி தேய்த்து விட்டு காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.
12. அதேபோல் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் கூட தலையில் இதனுடன் சேர்த்து நீங்கள் தலையில் தடவி குளித்து கொள்ளலாம்.உப்பு போட்டுவிட கூடாது.
13. இவ்வாறு 10 முதல் 15 நாட்கள் செய்து வரும் பொழுது உங்களது இளநரை, முது நரை ஆகியவை மறைந்து கருமையாக முடி வளரும்.