சென்னை புறநகர் மின்சார ரயிலில் அனுமதி மறுப்பு… அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு!

Photo of author

By Parthipan K

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவை அனைத்தும் முடக்கப்பட்டது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள அரசு ஊழியர்களுக்காக மட்டுமே இன்று முதல் புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளதாகவும் இந்த ரயிலில் கொரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டும் பயணம் செய்யலாம் என்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அடையாள அட்டை, அலுவலக கடிதம் இருந்தாலும் தலைமை செயலக அனுமதிக் கடிதமும் கேட்பதாக அரசு ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு ரயிலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுகாதாரம், மின்சாரத்துறை மற்றும் தலைமை செயலக ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.