மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து மற்றும் ரயில் சேவைக்கு அனுமதி:! தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!

0
72

மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து மற்றும் ரயில் சேவைக்கு அனுமதி:! தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற்று செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை எட்டாம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

பொது மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அளித்திருந்தது.அதாவது அனைத்து கடைகளும் 8 மணி வரை இயங்க உத்தரவு,தங்கும் விடுதிகளுக்கு அனுமதி மால்கள் திறப்பு,வழிபாட்டுத் தளங்கள் திறப்பு, மாவட்டங்களுக்குள்ளே
பொதுபோக்குவரத்து இயக்கம்,போன்ற பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அளித்திருந்தது.ஆனால் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தடையால், ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியும்,மக்கள் சிரமப்பட்டு வந்ததினால் இன்று மேலும் இரண்டு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதாவது செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான அனைத்து அரசு பேருந்துகளும்,தனியார் பேருந்துகளும் இயக்கப்படும் என்றும்,ரயில் போக்குவரத்திருக்கும் அனுமதி அளித்துள்ளது.தமிழ்நாடு அரசு அறிவித்த இந்த தளர்வானது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இருந்தபோதிலும்,அனைத்து பொது போக்குவரத்துகளும் இயக்கப்படுவதால் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது.எனவே முக கவசம் அணிந்து செல்வது,முறையான சமூக இடைவெளியை பின்பற்றுவது,அடிக்கடி சோப்பினால் கைகளை கழுவுவது,உள்ளிட்ட தனிமனித பாதுகாப்பை ஒவ்வொருவரும் பின்பற்றி தங்களை தாங்களே நோய் பரவுதலிருந்து காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.