குறைவான வட்டியில் தனிநபர் கடன்!! அட்டகாசமான வழிமுறைகள்!!

Photo of author

By Gayathri

குறைவான வட்டியில் தனிநபர் கடன்!! அட்டகாசமான வழிமுறைகள்!!

Gayathri

Personal loan at low interest!! Amazing methods!!

பல நேரங்களில் தங்களுடைய முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தனி நபர் கடன்கள் அவசியமாக உள்ளது. ஆனால் வீடு வாகனம் போன்றவற்றிற்கு கடன் பெறும் பொழுது செலுத்துகிற வட்டியை விட தனிநபர் கடனுக்கு வட்டி விகிதம் அதிகமாகவே உள்ளது.

தனிநபர் கடன்களை பெறுவதற்கு பெரும்பாலும் வங்கிகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பான ஆப்புகள் மூலம் பெறக்கூடிய சூழல் இப்பொழுது இருக்கிறது. எனினும் மூன்றாம் தரப்பு ஆப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களை அணுகும் பொழுது பல ஆபத்துக்களை சந்திக்க நேரிடும். இவற்றை தவிர்த்து குறைவான வட்டியுடன் எப்படி தனிநபர் கடன் பெறுவது என்பதுதான் மிக முக்கியமான விஷயம். இதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குறைந்தபட்டியில் தனிநபர் கடனை பெறுவதற்கான தகுதிகள் பின்வருமாறு :-

✓ 750 மேல் கிரெடிட் ஸ்கோரை பராமரித்தல்

✓ தங்களுடைய இ எம் ஐ களை குறிப்பிட நேரத்தில் செலுத்துதல்

✓ கடன் தொகையை திருப்பி செலுத்தக்கூடிய வரலாறு நல்லபடியாக இருந்தால் வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது

✓ வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்தல் மற்றும் சலுகைகள் குறித்த விவரங்களை அறிதல்

✓ பண்டிகை காலங்களில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது பல சலுகைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

✓ வருமான விகிதத்திற்கான நிலையான கடமை (FOIR) என்பது நிலையான வேலையை குறிப்பதாகும் ஒருவர் கட்டாயமாக இரண்டு வருடங்கள் ஆவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து இருப்பது அவர்களுடைய நல்ல பணிக்கான சூழலை வெளிக்காட்டும்

✓ வேலை பார்க்கக் கூடிய நிறுவனங்களில் நற்பெயரை பெற்றெடுத்தல் நல்ல நிதி நிலைமையை வெளிக்காட்டுவதாக அமையும். இதன் மூலமும் குறைவான வட்டியில் தனி நபர் கடன் பெற முடியும்