இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 100 க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சென்னையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், தொடர்ந்து 7வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
அதன் அடிப்படையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதந்தோறும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற அனுமதியை வழங்கியது.
ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்வதை பற்றி யோசித்துப் பார்த்தால் அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாகவே தோன்றுகிறது.