சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.
அதனடிப்படையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றினடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் 137 நாட்களாக ஒரே விலையில் நடித்துவந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 22ம் தேதியிலிருந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் நீண்ட நாட்களாக ஒரே நிலையில் இருந்த இந்த பெட்ரோல் ,டீசல் ,விலை திடீர் என்று உயர்வதற்கு காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.அதோடு பலரும் உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநில சட்டசபைத் தேர்தல் தான் இந்த பெட்ரோல் டீசல் விலை ஏறாமல் இருந்ததற்கான காரணம் சட்டசபை தேர்தல் முடிவுற்ற நிலையில் மத்திய அரசு அதன் வேலையை தொடங்கிவிட்டது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில், தலைநகர் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 107 ரூபாய் 45 காசுகளுக்கும், டீசலின் விலை 97 ரூபாய் 52 காசுகளுக்கும், விற்பனை செய்யப்பட்டது.இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை ஆகவே அதே நிலையில் நீடித்து வருகிறது.