உக்ரைனில் சிக்கி இருக்கும் எஞ்சிய இந்தியர்களின் நிலை என்ன! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட அதிரடி தகவல்!

0
74

கடந்த பிப்24 ஆம் தேதியிலிருந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடுமையான போரைத் தொடுத்து வருகிறது.

ஆகவே அங்கிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி முதல் ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்களை அனுப்பி உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பத்திரமாக மத்திய அரசு மீட்டு வருகிறது.

இந்தநிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிலிருந்து கடந்த மாதம் 22, 500 மாணவர்கள் உட்பட இந்தியர்கள் நாடு திரும்பி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ஆகவே அங்கு இன்னும் 50 இந்தியர்கள் மட்டுமே இருப்பதாகவும், அவர்களில் சிலர் மட்டுமே நாடு திரும்ப தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். அவர்களையும் இந்தியாவிற்கு அழைத்து வர தூதரகம் உதவி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் வருடம் நோய்த்தொற்று பரவல் ஆரம்பித்தபோது சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் திட்டத்தை ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலமாக 35 நாடுகளிலிருந்து சுமார் 2,9700000 இந்தியர்கள் நாடு திரும்ப வசதி ஏற்படுத்தபட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.