105 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!

0
181

105 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.94.45க்கும் விற்பனையானது.

நேற்று,பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.104.83க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.100.92க்கும் விற்பனையான நிலையில், இன்று பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.105.13க்கும், டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து ரூ.101.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Previous articleமீண்டும் அதிகரித்த பெட்ரோல் ,டீசல் விலை !
Next articleடிடிவி தினகரனுடன் சந்தித்த ஓபிஎஸின் நெருங்கிய உறவினர்! அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here