பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

Photo of author

By Sakthi

இந்தியாவைப் பொருத்த வரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது..
நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவிலை தடுக்கும் விதத்தில் மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவுகள் கடுமைப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் இந்த எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் ஒரே நிலையில் நீடித்து வந்தது.

இருந்தாலும் தற்சமயம் தமிழக பட்ஜெட் வெளியானதில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்சமயம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 99 ரூபாய் 47 காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்படுகிறது.