லார்ட்ஸ் இங்கிலாந்து டெஸ்ட்! சாதித்த இந்திய அணி!

0
62

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரையில் 19 டெஸ்ட் போட்டி நடைபெற்று இருகிறது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

கபில் தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையில் மட்டுமே இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியடைந்தது. 1986 ஆம் வருடத்தில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014ஆம் வருடம் தோனி தலைமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை அடைந்தது.

இந்தநிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெற்றியடைந்து நேற்று அபார சாதனை படைத்தது. இது லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பெற்றிருக்கின்ற மூன்றாவது வெற்றியாகும். அதோடு லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்தது இந்திய வீரர் லோகேஷ் ராகுல் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.