27-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
204

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்வதற்கான அனுமதியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. அதன்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இதனடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து 53 நாளாக இன்றைய தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல நாட்டில் டெல்லி மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் தொடர்ந்து ஒரு சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை. முன்னதாக கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழ் சினிமா இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை புறக்கணிக்கிறதா? உண்மையென்ன ஒரு அலசல்
Next articleபாடகர் மாணிக்க விநாயகம் மறைவு! முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!