தமிழ் சினிமா இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை புறக்கணிக்கிறதா? உண்மையென்ன ஒரு அலசல்

0
159
A. R. Rahman
A. R. Rahman

தமிழ் சினிமா இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை புறக்கணிக்கிறதா? உண்மையென்ன ஒரு அலசல்

இந்த பெயரை சொன்ன உடனே அடுக்கடுக்காக அவர் செய்த சாதனைகள்.தான் நினைவிற்கு வரும். அவ்ளோ பெரிய சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர். யார் மீதும் குறை சொல்லாத எளிமையான மனிதர்.எப்படி அவர் இசைக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்களோ,அதே அளவிற்கு சிறந்த பண்பாளராக அவரை ரசிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

எத்துணை உயரங்களை கடந்த போதிலும் சிறு பிள்ளை போல் தான் நடந்துகொள்வார். பிறரை பற்றி தவறாக ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.அப்பேர்பட்டவர் ஒரு முறை ஹிந்தி சினிமாவில் தன் வாய்ப்புகள் வேண்டுமென்றே சிலரால் கெடுக்கப்படுகின்றன என்று சொல்லும் போது ஒட்டு மொத்த உலகமும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பின.

ஆனால் தமிழ் சினிமாவிலும் அவருக்கான இடம் மறைமுகமா மறுக்க பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை.ராம்கோபால் வர்மா ஹிந்தியில் கால் பதிக்க எண்ணும் போது,ரஹ்மான் கூட இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று அவரோடு பயணத்தை தொடங்கினார். அது அவருக்கு எவ்ளோ பெரிய வெற்றியையும் பெரிய அங்கீகாரத்தையும் கொடுத்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

ஆனால் இன்று ஷங்கர் போன்ற மூத்த இயக்குனர்கள் கூட ரஹ்மானை நம்பி எதையும் செய்ய மறுக்கிறார்களோ என்ற எண்ணம் மனதில் எழுகிறது. அதற்கு காரணம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் போது,அனிருத்தை தான் தேர்வு செய்தார். அதில் என்ன தவறு என்று கேட்பவருக்கு?? ரோபோ 2 படத்தின் இசை வெளியிட்டு விழா பதிலாக அமைந்தது. அந்த விழாவில் இந்தியன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் கமல். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்ற போது, அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தான்.

ரஹ்மான் இதை பத்தி மேடையில் பேசும் போது கூட,கமல் ஹாசன் தன்னை இந்தியன் படத்திற்கு இசை அமைக்க சொன்னதாக சொன்னார். மேலும் ரஹ்மான் பேசும்போது, இப்போது தான் ரோபோ 2 படத்தை முடித்து விட்டு வந்ததாலும் மேற்கொண்டு தன்னை மீண்டும் தொல்லை செய்ய கூடாது என்று ஷங்கர் நினைத்திருப்பார் என்று வெள்ளந்தியாக கூறி சிரித்தார்.

முதலில் ரசிகர்களும் அவ்வாறே நினைத்திருந்தனர். மேலும் ஷங்கர் ஏற்கனவே வேறு இசையமைப்பாளர் உடன் பணிபுரிந்தவர் என்பதால் அதை ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.ஆனால்,அவர் தெலுங்கில் படம் செய்ய போவதாக அறிவித்த போது தான் கலகம் பிறந்தது. ஆம் இந்த முறையும் ரஹ்மானுடன் பயணிப்பார் என்று நினைத்த ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது.

இந்த முறை தமனை இசையமைப்பாளராக தேர்வு செய்திருந்தார் ஷங்கர்.இந்த அறிவிப்பும் ரசிகர்கள் மத்தியில் பரப்பாக பேசப்பட்டது. காரணத்தை ஆராய்ந்த போது, தெலுங்கில் கொடிக்கட்டி பறக்கும் தமன் இசையமைத்தால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தார் ஷங்கர். ஏன் ரஹ்மானால் தெலுங்கில் ஹிட் கொடுக்க முடியாத என்ற கேள்விகள் பலமாக எழுந்தன.

இது ஷங்கரின் வியாபாரா தந்திரத்தை தான் காட்டிருக்கிறது. ஏனெனில் ரஹ்மான் தெலுங்கில் இசையமைத்த புலி படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அதனால் அவருக்கு இது சரியாக வராது என்று ஷங்கர் நினைத்திருக்கலாம்.மேலும் தமன் தெலுங்கில் ஹாட் லிஸ்டில் இருப்பதால் தெலுங்கில் பெரிய ஹிட் கொடுக்கலாம்.அது ரஹ்மானால் முடியாது என்று ஷங்கர் நினைத்திருக்க வாய்ப்பு இருக்கு அல்லது எப்போதும் போல் அவருக்கு நேரமில்லை அவர் ரொம்ப பிசி என்றும் நினைத்திருக்கலாம்.

எப்படி ஹிந்தியில் ரஹ்மானை பற்றி புரளி கெளப்பினார்களோ,அதை யே சிலர் தமிழிலும் செய்திருக்கிறார்கள். சர்க்காருக்கு சன் பிக்சர்ஸ் ரஹ்மானை தேர்வு செய்த போது, ரஹ்மான் ஒரு இடமாக இருக்க மாட்டார் அவரிடம் இசை வாங்குவது சிரமம் என்று சிரித்த படியே படத்தின் இயக்குனர் முருகதாஸ் சொல்லிருப்பார். உண்மையில் அப்படி ஒரு பிம்பம் தான் தமிழ் திரை உலகில் ரஹ்மான் மீது இருக்கிறது.

ஆனால் ரஹ்மானோ வழக்கம் போல் இல்லாமல் இப்போது தான் நெறைய படங்களுக்கு இசை அமைக்கிறார். இது,தமிழ் திரை உலகில் அவர் மீது இருந்த தவறான பிம்பத்தை உடைத்து எறிந்திருக்கிறது. நிறைய புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருகிறார். அவரை பொறுத்த வரை கதைக்களம் வித்யாசமாக இருக்க வேண்டுமே ஒழிய வேறொன்றுமில்லை .

அதனால் தான் இப்போது அவர் தேர்வு செய்யும் படங்களும் கூட்டணியும் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.அதில் கோப்ரா படத்தை இயக்குனர் டிமான்டி காலனி எடுத்த ஞானவேல் இயக்குகிறார்.இந்த படத்தில் விக்ரம் ஏழு கெட்டப்பில் நடித்திருப்பார் இது ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் அயலான். இந்த படம் ஒரு வேற்று கிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் கதை.

இரவின் நிழல் முதன்முறையாக ஒன் ஷாட் முறையில் ரா பார்த்திபன் இயக்கும் படம்.

சிம்பு நடிக்கும் பத்து தல. தெலுங்கில் ஹிட்டடித்த மப்டி படத்தின் ரீமேக் கதை. சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்குகிறார்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்கும் வெந்து தணிந்தது காடு.

கடைசியாக பொன்னியின் செல்வன் ரஹ்மானின் குருநாதர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்ட வரலாற்று கதை.

இதில்லாமல் மலையாளம் ஹிந்தி ஹாலிவுட் என்று அவர் இசையமைக்கும் படங்களின் பட்டியல் நீள்கிறது.இவையெல்லாம்,திரைக்கு ரஹ்மான் வந்து 30 வருடங்கள் கழிந்தாலும் அவரின் ஆதிக்கம் இன்னும் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

மேலும் கதைக்கும் வித்யாசமான முயற்சிக்கும் எப்போதும் ரஹ்மான் நோ சொன்னதில்லை என்பதையே காட்டுகிறது.இது தெரியாமல் இன்றும் சிலர் ரஹ்மானை அணுக பின்வாங்குவது ரசிகர்களுக்கு வேதனையாக இருக்கிறது.

சமீபத்தில் கூட மலையாளத்தில் பாகத் பாசில் புதுமுக இயக்குனருடன் களமிறங்கிய மலையான் குஞ்சு படத்திற்கு பின்னணி இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனாலும் தமிழில் முன்னணி இயக்குனராக உள்ள பலரும் ரஹ்மானை புறக்கணிப்பது போன்ற ஒரு பிம்பமும் உருவாகி வருதிறது என்பதை மறுப்பதற்கில்லை.