தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை- இன்றைய நிலவரம்

Photo of author

By Parthipan K

தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை- இன்றைய நிலவரம்

Parthipan K

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது, சற்றும் குறைந்தபாடில்லை. இது வாகன ஓட்டிகளுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணத்தினால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த விலை உயர்வானது கடந்த 7 ஆண்டுகளை விட மிக அதிகமாக உயர்ந்து கொண்டே வருகிறது.

பெட்ரோல், டீசல் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் உயர்ந்துள்ளது .பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.01-ஆகவும், டீசல் ரூ.98.92-க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வானது இந்த மாதத்தில் 16வது முறையாக உயர்ந்துள்ளது.