பிஎஃப் 7 கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து! அடுத்த மாதம் அறிமுகம்!

0
123

பிஎஃப் 7 கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து! அடுத்த மாதம் அறிமுகம்!

 

புதிய வகை கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

கொரானாவின் தாயகமான சீனாவில் புதிய வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. பி.எப் 7 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் ஒமிக்ரானின் துணை வைரஸ் ஆகும். வேகமான இனப்பெருக்கத்திறன் மற்றும் பரவும் தன்மையுடையது.

சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா தென்கொரியா ஜப்பான் பிரேசில் ஜெர்மனி போன்ற நாடுகளில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் எண்ணிக்கை அதிகம் ஆகியுள்ளது. குஜராத்தில் மூன்று பேருக்கு மட்டும் கண்டறியப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பீகாரில் வெளிநாட்டு பயணிகளுக்கு கண்டறியப்பட்டுள்ளது. எனவே நமது இந்திய அரசாங்கம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கொரோனா கால தடுப்பு முறைகள் பற்றி கடிதம் ஒன்று எழுதி அனுப்பியுள்ளது. அடுத்து விமான நிலையங்கள் ரயில் நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் பொது விழாக்கள் நடத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.

நமது நாட்டில் கொரோனா பரவலின் தாக்கம் சீனாவைப் போல அதிகரிக்க தொடங்காது என நிபுணர்கள் கருத்து தெரிவித்த போதும் போதுமான முன்னெச்சரிக்கைகளை இந்திய சுகாதார அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கொரோனா காலத்தில் கோவாக்சின் என்ற தடுப்பூசி மருந்தை தயாரித்து வழங்கிய ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் இன் கோவேக் என்னும் மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து நமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. பாரத் பயோ டெக் நிறுவனம்+ அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிபிவி154 பெயர் கொண்ட மூக்கு வலி தடுப்பு மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து இன் கோவா என்ற பெயருடன் விற்பனைக்கு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் அவசரகால பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் இதற்கு அனுமதி அளித்த நிலையில் தற்போது இந்திய அரசாங்கம் கடந்த 23ஆம் தேதி இந்த மருந்திற்கு அனுமதி வழங்கியது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூக்கு வழியே செலுத்தும் இந்த தடுப்பு மருந்து மூன்று கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றி கண்டுள்ளது.

இந்த மருந்து பூஸ்டர் தடுப்பு மருந்தாக அறிமுகம் செய்யப்பட்டு, ஜனவரி 4- வந்து வார காலத்தில் பயன்பாட்டுக்கு வந்து விடும். மருந்தை எளிய முறையில் இருப்பு வைத்துக் கொள்ளலாம் விநியோகிக்கலாம்.

மருந்தானது மூன்றாவது கட்ட பரிசோதனையில் 14 இடங்களில் 3100 பேருக்கு நாசி வலியை செலுத்தப்பட்டு பரிசோதனையில் வெற்றி கண்ட பிறகு பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதுகாப்பும் சோதிக்கப்பட்டுள்ளது என்பதும் அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Previous article‘சீதா ராமம்’ பட நாயகி மிருணல் தாகூரின் அழகின் ரகசியம் இதுதான் !
Next articleரேஷன் கடையில் பொங்கல் பரிசு வாங்க செல்வோருக்கு இது கட்டாயம்!!