பிஎஃப் பணத்தை சேமிப்பு கணக்கிலே கொண்டு வரக்கூடாது!! பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனின்!!

0
113
PF money should not be brought into savings account!! Economist Anand Srinivasan!!
PF money should not be brought into savings account!! Economist Anand Srinivasan!!

வளர்ந்து வரும் நவீன காலங்களில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. அதுவும் இந்த பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணத்தினால் நமது சேமிப்பும் பல் மடங்காக பெருகும் படி சேமிப்பு திட்டத்தை திறம்பட செலக்ட் செய்வது சேமிப்பதை விட மிக முக்கியமான ஒன்று. இந்த சேமிப்பு கணக்குகள் குறித்து பல முண்ணனி வல்லுநர்களும் சோசியல் மீடியா மூலம் மக்களுக்கு பயன் தரும்படி தகவல்களை எடுத்துக் கூறி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மிகச் சிறந்த முதலீடுகள் குறித்து பேசும் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் ஆவார்.

இவர், அவரது யூடியூப் சேனலில் கிரெடிட் கார்டு யூசேஜ், முதலீடுகள் மற்றும் சேமிப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிடுவார். இது சேமிப்பு கணக்கை புதிதாக தொடங்குபவர்களுக்கு நல் வழிகாட்டுதலாக அமையும். புதிதாக சேமிப்பு கணக்குகளை ஆரம்பிப்பவர்களும் கமெண்ட்ஸ் மூலம் பல கேள்விகளை எழுப்புவர். அக்கேள்விகளுக்கு அவரும் அடுத்த வீடியோவில் விளக்கம் அளிப்பார். அதன்படி தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பிஎஃப் பணத்தை எடுத்து சேமிப்பு செய்வது சரியா? தவறா? என ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பின்வருமாறு பதில் அளித்துள்ளார்.

மற்ற வட்டி விகிதங்களுடன் ஒப்பிடுகையில், பிஎஃப் -ல் கிடைப்பது குறைந்த வட்டி விகதமே. இதன் காரணமாக இந்த பணத்தை எடுத்து பெரும் வட்டி கிடைக்கும் இடங்களில் முதலீடு செய்யலாமா? என்ற குழப்பத்தில் சிலர் இந்த தவறை செய்கின்றனர். இப்படி செய்வது சரியா? தவறா? மேலும் ஏதேனும் ரிஸ்க் இருக்கலாமோ? என்று நம்மை சுற்றியே சிலர் கேட்க கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்படி செய்வது சரியானது அல்ல. பிஎஃப் பணத்தை எடுத்து வேற ஃபண்டில் போடுவது மிக தவறானது. உங்கள் மனதில் பிஎஃப் ( கட்டாய சேமிப்பு ) என்ற பணம் உங்களிடம் உள்ளது என்பதையே நீங்கள் மறந்து விட வேண்டும். அப்பணம் வருமான வரி கட்டுவது போல் எண்ணி அது திரும்ப வராது என நினைத்து கொள்ளுங்கள். ஏனென்றால், சம்பளம் வாங்குபவர்களுக்கே இந்த பிஎஃப் பணமானது ஒதுக்கப்பட்டு வருகிறது.

சம்பளம் வாங்குபவர்கள் பெரும்பாலும் மிடில் கிளாசில் உள்ளவர்கள் தான். அவர்களுக்கு கிடைக்கும் பணத்தை வைத்து அவர்களால் பணக்காரர்களாக மாறவே முடியாது. அதிக சம்பளம் வாங்கும் சிலரே அப்பர் மிடில் கிளாஸாக மாறியுள்ளனர். இந்த பிஎஃப் பணமானது ஓய்வு பெறும் காலங்களில் ஒரு சிறு போனஸாக நமக்கு கிடைக்கும். வளர்ந்து வரும் இந்த காலங்களில் சேமிப்பு இல்லையென்றால் ஓய்வின் பின் நிம்மதியாக வாழ்வது மிக கடினம். அவர் கூறிய ஃபார்முலாவானது “சேமிப்பு+ முதலீடு” நல்லதாயினும், பிஎஃப் பணத்தை எடுத்து முதலீடு செய்ய வேண்டாம். சேமிப்பு தனியாகவும், பிஎஃப் தனியாகவும் இருந்தால்தான் கடைசி காலங்களில் பிரச்சினை நமக்கு இருக்காது என்று விளக்கம் அளித்துள்ளார்.

Previous articleஎன்னங்க இது புதுசா இருக்கு.. தொடங்கும் இஸ்ரேல் vs துருக்கி போர்!! உருவாகும் புதிய பேரரசு!!
Next articleதிபெத்தில் ஒரே நாளில் இத்தனை முறை நிலநடுக்கமா?? இந்தியாவிலும்  நடந்த அதிர்வு!! பறிபோன பல உயிர்கள்!!