தேவையற்ற போன் கால்ஸ் தவிர்க்கவும்! வாட்ஸ் ஆப் பிரியர்களுக்கு எச்சரிக்கை!!

Photo of author

By Parthipan K

தேவையற்ற போன் கால்ஸ் தவிர்க்கவும்! வாட்ஸ் ஆப் பிரியர்களுக்கு எச்சரிக்கை!!

சமூக வலைத்தலங்களில் அதிகப்படியான மோசடிகள் நடந்து கொண்டே தான் இறுகின்றனர், முக்கியமாக பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சமூக வலைத்தலங்களில் திருட்டு சம்பவங்கள், ஆபாச உரையாடல் மூலம் ஏமாற்றுவது, வங்கி அதிகாரிகள் என்று சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அக்கௌன்ட் எண் கேட்பது, ஆதார் எண், பாண் எண் விவரங்களை கேட்டு பெற்று தனிநபர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது என பல்வேறு மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளது.

ஆன்லைன் மோசடியில் 10 லட்சம் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு  வந்திருக்கிறது நீங்கள் இந்த எண்ணிற்கு போன் செய்தல் அல்லது நாங்கள் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்தல் உங்களுடைய வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என்று சொல்லி மோசடி செய்துவது நடந்துகொண்டே தான் இருக்கிறது.

சில வெளிநாட்டு தொலைபேசி எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்காமல் தவிர்ப்பது தான் நல்லது, பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக கூறுவது, சில தவறான பெண்கள் அறிமுக படுத்துவதாக கூறுவது வீடியோ கால்ஸ் அல்லது தனிநபர் தகவல்களைப் பெறுவது பின்பு அவர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்கள் நடக்கிறது.

தற்போது வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு இந்த சர்வதேச தொலைபேசி எண் அழைப்புகள் வருகின்றனர், பல பில்லியன் மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் மலேசியா (+60), இந்தோனேசியா(+62), கென்யா (+254), வியட்நாம் (+84), போன்ற தொலைபேசி எண்ணில் இருந்து வரும் சர்வதேச அழைப்புகளை எடுக்காமல் தவிர்ப்பது தான் நல்லது என்று தெரிவிக்கின்றனர்.