இனி போன் பேவில் சாட் செய்யலாம்! அசத்தலான புதிய வசதி!

Photo of author

By Parthipan K

இனி போன் பேவில் சாட் செய்யலாம்! அசத்தலான புதிய வசதி!

போன்பே செயலியின் பணம் அனுப்புவது மட்டுமில்லாது தங்கள் தொடர்பாளர்களுடன் இனி சாட்(Chat) செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

நவீன காலத்துக்கு ஏற்றார்போல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள பல ஆன்லைன் செயலிகள் வந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒன்று போன் பே ஆப். இந்த செயலியின் மூலம் நீங்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் செல்போன் எண் மட்டும் இருந்தால் போதும் 5 நிமிடத்தில் பணம் அனுப்பலாம். இதுபோல சந்தையில் பல செயலிகள் உள்ளதால் தங்கள் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த போன் பே புதிய வசதி ஒன்றை தங்கள் ஆப்பில் கொண்டு வந்துள்ளது.

ஃபோன்பே செயலியில் பரிவர்தனை வரலாறு (transaction history) எனும் ஆப்ஷனில் புதிய பிரிவாக chat flow-என்ற ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்களுடன் உரையாடலை மேற்கொண்டு பணப்பரிவர்த்தனையை உறுதி செய்து கொள்ளலாம்.

இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சாப்ட்வேர்களில் வேலை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 185 மில்லியனுக்கும் அதிகமான ஃபோன்பே பயனர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிகிறது.

விரைவில் இதில் க்ரூப் சாட் போன்ற வசதிகளையும் இணைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.