நிர்பயா கொலை வழக்கு:குற்றவாளிகள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அவகாசம்!

0
69

நிர்பயா கொலை வழக்கு:குற்றவாளிகள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அவகாசம்!

நிர்பயா கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தங்களுக்கான சட்ட ரீதியிலான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் சிறுவனுக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதாகவும் அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் எனவும் நிர்பயாவின் தாயார் மகளிர் அமைப்புகளுடன் சேர்ந்து போராடினார். இதற்கிடையில் சிறையில் இருந்த குற்றவாளிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடவேண்டும் என தீர்ப்பு வெளியானது. இதை அடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் தூக்கில் இடப்பட உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து இதற்காக ஹேங்க்மேன் மற்றும் தூக்குக் கயிறு ஆகியவைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அப்போது குற்றவாளிகளில் ஒருவரின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்டிருந்ததால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதனால் குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நிர்பயாவின் தாயார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதே வழக்கில் குற்றவாளிகளுக்குத் தனித்தனியாக தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என மத்திய அரசு கோரியது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ‘ஒரே வழக்கில் சம்மந்தமுடைய குற்றவாளிகளுக்கு தனித்தனியாக தண்டனை நிறைவேற்ற முடியாது. அதேபோல குற்றவாளிகள் அனைவரும் தங்களுக்கான சட்ட ரீதியிலான வாய்ப்புகளை இன்னும் 7 நாட்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதிகாரிகள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வர்’ எனத் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K