இணையத்தில் வைரலாகும் சியான் வாரிசின் புகைப்படம்! சின்ன சியான் என்று புகழும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களும் இயக்குனர்களும் தங்களது வாரிசுகளை சினிமாவில் உள்ளே நுழைத்து கொண்டிருக்கின்றனர். இது தமிழ் சினிமாவில் ஒன்றும் புதிய விஷயம் அல்ல. தங்களது வாரிசுகளை தாங்கள் இயக்கிய படத்தில் நடித்த வைத்த தந்தைகளும் இருக்கின்றனர்.

சியான் விக்ரம் மகனின் ஆசைக்காக தெலுங்கில் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி என்ற படத்தினை தமிழில் அவரது முதற்படமாக்கினார்.இந்தப் படம் ஃபிளாப் ஆனாலும் துரு விக்ரமுக்கு நல்ல ஒரு வரவேற்பு தமிழ் மக்களிடையே கிடைத்தது.

அந்தப் படத்தில் அவரது நடிப்பு மற்றும் ஆட்டிட்யூட் தமிழ் மக்களின் மனதை கவர்ந்தது.இவர் ஹீரோவாக நடிக்கலாம் என்று அங்கீகாரத்தையும் மக்கள் அளித்தனர். தற்போது துரு விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து நடிக்கிறார் என்று தெரியவருகிறது. கொரோனாவின் தாக்கத்தால் சூட்டிங் நடைபெறாமல்  தடைப்பட்டு உள்ளது.

இந்த லாக் டவுன் காலத்தில் பல நடிகர் நடிகைகள் தங்களது பல திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அப்பா-மகன் இருவருமே ஜிம்மே கதி என்று இருக்கிறார்களாம். மேலும் தங்களது உடம்பை தாறுமாறாக ஏற்றி  மெருகூட்டி வருகிறார்களாம்.இணையத்தில் வைரலாகும் சியான் வாரிசின் புகைப்படம்! சின்ன சியான் என்று புகழும் நெட்டிசன்கள்!துரு விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மாத ஸ்பெஷல் லுக் என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அது இணையத்தில் டாப் ட்ரெண்டிங்  ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Leave a Comment