நியூயார்க்கை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் ஆண்கள், பெண்கள் என 200 பேரை நிர்வாணமாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்து இருக்கிறார்.
இது பல தரப்பினரிடையே தற்போது சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் கிளப்பி உள்ளது.
பருவ நிலை மாற்றங்களால் சுற்றுசூழலில் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
சமூக ஆர்வலர்கள் பலரும் இது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
உலக நாடுகள் அனைத்தும் புவி வெப்பமயமாதலை தடுக்க ஆலோசனைகள் நடடத்துகின்றன.
டெட் சீ எனப்படும் உப்புக்கடல் பருவநிலை மாற்றத்தால் பரப்பளவில் சுருங்கி வருகிறது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் ட்யூநிக் 200 ஆண்கள் பெண்களை நிர்வாணமாக வெள்ளை பெயிண்ட் அடித்து கடற்கரையின் முன்பு நிற்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் 10 வருடத்திற்கு முன்பான கடலின் பரப்பளவு மற்றும் தற்போதைய பரப்பளவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
கால நிலை மாற்றத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த புகைப்படம் இருக்கும் என்றாலும், பலதரப்பட்ட மக்களிடையே எதிர்ப்பை கிளப்பியுள்ளது.