இன்று முதல் ஆரம்பமாகிறது டி20 உலக கோப்பை சூப்பர்-12 போட்டிகள்.!!

0
79

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன.

இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

மேலும், மற்ற 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடி அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இதில் உள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘எ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூகினியா அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த 8 அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதிச் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து, வங்காளதேசம் அணிகளும், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை, நமீபியா அணிகளு சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் சூப்பர் 12 போட்டிகள் ஆரம்பமாகிறது. இதில், இன்று மதியம் 3.30 மணிக்கு அபுதாபி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

மேலும், இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.