குளிர்பானத்தில் மது கலந்து உடற்கல்வி ஆசிரியர் செய்த வெறிச்செயல்!! போக்சோ- வில் கைது!!

Photo of author

By Sakthi

தூத்துக்குடி மாவட்டம் உடன் குடி பகுதியில் சல்மா மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணி புரிந்து வருபவர் பொன் சிங்.

இப்பள்ளியில் இருந்து மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற மாணவிகளை அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் பொன் சிங். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் அளவில நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற பொன் சிங் பள்ளி மாணவிகளை அழைத்து சென்று இருக்கிறார். விளையாட்டு போட்டிகள் இரு நாட்கள் நடைபெறும் என்று தெரிவக்கப்பட நிலையில் விடுவதில் மாணவிகளுடன் தங்கி இருக்கிறார் பொன் சிங்.

முதல் நாள் மட்டும் போட்டிகள் நடைபெற்று இருக்கிறது. அடுத்த நாள் போட்டிகள் எதுவும் நடைபெற வில்லை,மாணவிகள் மற்றும் ஆசியர் பொன் சிங் விடுதியில் தங்கி இருக்கிறார்கள். அப்போதுதான் தன் சுய ரூபத்தை காட்டி இருக்கிறான் பொன் சிங், மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் திட்டியும், குளிர் பானங்களில் மதுவை கலந்து கொடுத்து மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி இருக்கிறான் பொன் சிங். இதனை தொடர்ந்து ஆசிரியர் பொன் சிங்கால் தமக்கு நேர்ந்த கொடுமைகளை மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்கள்,இச் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சல்மா மெட்ரிக் பள்ளி வளாகத்தை முற்றுகை ஈட்டு போராட்டம் செய்துள்ளார்கள்.

இது குறித்து போலீசாரிடமும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த ஆசிரியர் உடற் கல்வி ஆசிரியர் பொன் சிங் தலை மறைவாகி இருக்கிறார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியில் நேற்று கோவை மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங் போலிசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். சல்மா பள்ளியின் தலைவர் சார்லஸ் மற்றும் செயலாளர் சையது அகமது ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள்.

விசாரணை முடிவில் ஒரு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது, அதில் மாணவிகளுடன் பாலியல் தொல்லை அளித்த உடற் கல்வி ஆசிரியர் பொன் சிங்க்கு உடந்தையாக பள்ளியின் தலைவர் மற்றும் செயலாளர் இருந்து தெரிய வந்துள்ளது. இதனால் இந்த மூவரையும் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளார்கள். கல்வி போதிக்கும் ஆசிரியர்களே இந்த இழிவான செயலை செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.