மாதவிடாய் நாட்களில் உடலுறவு கொள்ள விரும்புவாரா நீங்கள்?

Photo of author

By Parthipan K

மாதவிடாய் நாட்களில் உடலுறவு கொள்ள விரும்புவாரா நீங்கள்?

Parthipan K

பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ள விஷயம் மாதவிடாய் தான். கருவுறாத முட்டை வெடித்து வெளியேறும் நிகழ்வே மாதவிடாய். இது பெண்களுக்கு சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் இயற்கை நிகழ்வாகும்.

கர்ப்பப்பை சுருங்கி விரிந்து இறந்த செல்களை வெளியே அனுபவத்தால் பெண்களுக்கு கடுமையான வயிறு வலி, இடுப்பு வலி, கை, கால்கள் வலி என பல பிரச்சனைகள் ஏற்படும். உடல் சோர்வும், மன சோர்வும் சேர்ந்தே ஏற்படும்.

மேலும் இறந்த செல்கள் வெளியேறுவதால் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. அதனாலேயே மாதவிடாய் நாட்களில் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இதற்காக தான் பண்டைய நாட்களில் மாதவிடாய் நாட்களில் பெண்களை தனிமைப்படுத்தி, எந்த வேலையும் செய்ய விடாமல் வைத்திருந்தார்கள்.

பொதுவாகவே மாதவிடாய் காலங்களில் உடலுறவு கொள்வது பற்றி பல சந்தேகங்கள் இருக்கின்றன. பலர் மாதவிடாய் காலங்களில் உடலுறவு கொள்வது ஆபத்தானது என பெரியவர்கள் கூறுகின்றனர்.

பெண்களுக்கு ஏற்கனவே மாதவிடாய் நாட்களில் பெண்கள் சோர்வாகவும், வலியுணர்வுடனும் இருப்பதால் பொதுவாக உடலுறவில் நாட்டம் இருக்காது.

ஆனால் ஒரு சில பெண்கள் மாதவிடாய் நாட்களில் உடலுறவில் அதிகம் நாட்டம் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.

நம் நாட்டில் இது போன்ற விஷயங்களை வெளியில் சொல்லவே தயங்குகிறார்கள்.

ஆனால் பெண்களில் பலருக்கு மாதவிடாய் காலங்களில் செக்ஸ் உணர்வு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மாதவிடாய் நாட்களில் தகுந்த பாதுகாப்புடன் உடலுறவு கொள்ளலாம் எனக் கூறுகின்றனர். அதிகளவு ரத்த போக்கு இல்லாத நேரத்திலும் உடலுறவு கொள்ளலாம் எனக் கூறுகின்றனர்.