PILES: பைல்ஸ் பிரச்சனையா? நீங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இவை!!

Photo of author

By Divya

PILES: பைல்ஸ் பிரச்சனையா? நீங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இவை!!

மனித உடலில் ஆசனவாய் பகுதியில் ஏற்படக் கூடிய வலி,வீக்கத்தை தான் பைல்ஸ் அதாவது மூல நோய் என்று அழைக்கிறோம்.பைல்ஸ் இருந்தால் மலத்துடன் இரத்தபோக்கு ஏற்படும்.ஆரம்ப நிலையில் ஆசனவாய் பகுதியில் வலி எதுவும் ஏற்படாது.ஆனால் இந்த பாதிப்பை கவனிக்காமல் விட்டோம் என்றால் வலி,வீக்கம்,எரிச்சல்,அரிப்பு உள்ளிட்ட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

50 வயதை கடந்த பலர் இந்த மூல நோயால் அவதியடைந்து வருகின்றனர்.கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் சந்திக்க கூடிய நோய் பாதிப்பாக பைல்ஸ் உள்ளது.

தொடர் வயிற்றுப்போக்கு,மலச்சிக்கல்,இரத்த நாள அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பைல்ஸ் பாதிப்பு ஏற்படுகிறது.உடலில் நார்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் கடுமையான மலச்சிக்கல் உண்டாகும்.இதனால் நாளடைவில் பைல்ஸ் பாதிப்புக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம்.

உட்புறத்தில் ஏற்படக் கூடிய மூல நோய் வலியற்றவை.ஆனால் வெளிப்புற மூல நோயை அவசியம் கவனிக்க வேண்டும்.ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் சீரான குடல் இயக்கத்திற்கு வழிவகுக்கும்.இதனால் ஆரம்ப நிலையிலேயே பைல்ஸ் பாதிப்பை கட்டுப்படுத்தி விடலாம்.

பைல்ஸ் பாதிப்பு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:-

1)நார்ச்சத்து நிறைந்த பீர்க்கன்,கொத்து அவரை,முருங்கை,பட்டாணி,கேரட்,பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2)வாழைப்பழம்,ராஸ்பெர்ரி,ஆப்பிள்,பேரிக்காய்,அவகேடா உள்ளிட்ட பழங்கள் சாப்பிட வேண்டும்.

3)பாதாம்,சியா,உலர் அத்தி,உலர் திராட்சை உள்ளிட்டவற்றை ஊற வைத்து சாப்பிட வேண்டும்.

4)வெங்காய தேநீர்,வெந்தய தேநீர்,எலுமிச்சை தேநீர் அருந்த வேண்டும்.

5)உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.எண்ணெயில் பொரித்த,வறுத்த,காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.