PILES: மூல நோய் படுத்தி எடுக்கிறதா? மோரில் இந்த பொடியை கலந்து குடித்தால் பைல்ஸ் குணமாகும்!
வியாதிகளிலேயே மிகவும் கொடுமையாக வியாதி பைல்ஸ்.ஆசனவாய் பகுதியில் சிறு சிறு புண்கள் போன்று உருவாகி அதிக வலி,எரிச்சல்,இரத்த போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை உண்டாக்கும்.
பைல்ஸ் பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிப்பதில் மிகவும் சிரமம் ஏற்படும்.மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்,ஆசனவாய் பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுதல் போன்றவை ஏற்பட்டால் அவை சொல்லமுடியாத வேதனையை ஏற்படுத்தும்.இந்த பைல்ஸ் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணமாக்கி கொள்ள விட்டால் நிச்சயம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பைல்ஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மலக் கழிவுகளை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேறிவிட வேண்டும்.ஆசனவாய் பகுதியை சுத்தமான தண்ணீர் கொண்டு க்ளீன் செய்ய வேண்டும்.எளிதில் செரிமானம் ஆக கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பைல்ஸ் பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் மாதுளை தோல் மற்றும் மோரை கீழ்கண்டவாறு பயன்படுத்தி வந்தால் வெகு விரைவில் தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
1)மாதுளை தோல் பொடி – 1 தேக்கரண்டி
2)மோர் – 1 கிளாஸ்
செய்முறை:-
ஒரு மாதுளை பழத்தின் தோலை சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து கோலா வேண்டும்.அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து மாதுளை தோல் சேர்த்து அரைத்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.
அடுத்து அரை கிளாஸ் கெட்டி தயிரில் 1/2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மோரில் அரைத்து வைத்திருக்கும் மாதுளை பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கலந்து குடித்து வந்தால் பைல்ஸ்(மூலம்) குணமாகும்.
அதேபோல் மோரில் வெந்தயம்,கற்றாழை சாறு ஆகியவற்றை கலந்து குடித்து வந்தாலும் பைல்ஸ் பாதிப்பு முழுமையாக குணமாகும்.