உங்களுக்கு பைல்ஸ் பாதிப்பு இருந்தால் துத்தி கீரையை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.நிச்சயம் பைல்ஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம்.
தேவையான பொருட்கள்:-
1)துத்தி இலை – இரண்டு
2)மோர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு துத்தி கீரை இலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை வாணலியில் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும்.
பின்னர் ஒரு கிளாஸில் பசு மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் வதக்கிய துத்தி கீரையை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த மோரை குடித்தால் மூல நோய் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)துத்தி கீரை – இரண்டு
2)பூண்டு பல் – ஒன்று
3)சின்ன வெங்காயம் – நான்கு
4)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
5)உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு பல் பூண்டை தோல் நீக்கிவிட வேண்டும்.
அதன் பிறகு இரண்டு துத்தி கீரையை பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு பூண்டு பல் மற்றும் சின்ன வெங்காயத்தை நறுக்கி அதில் போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் துத்தி கீரையை அதில் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டும்.அதன் பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கிய பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த துத்தி கீரையை சாதத்தில் போட்டு சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பாதிப்பு குணமாகும்.