ஆசனவாய் பகுதி மற்றும் மலக் குடலில் நரம்புகள் வீங்கிய நிலைக்கு பைல்ஸ் அதாவது மூல நோய் என்று பெயர்.தற்போதைய காலத்தில் இந்த பைல்ஸ் பாதிப்பை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.
உள் மூலம்,வெளி மூலம் என்று இதில் பல வகைகள் இருக்கின்றது.உடலில் நார்ச்சத்து குறைபாடு,நீர்ச்சத்து குறைபாடு,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் இருந்தால் பைல்ஸ் பாதிப்பு ஏற்படும்.
பைல்ஸ் அறிகுறிகள்:
1)ஆசனவாய் பகுதியில் புண்கள்
2)மலம் கழிப்பதில் சிரமம்
3)ஆசனவாய் எரிச்சல் மற்றும் வீக்கம்
4)இரத்தத்துடன் மலம் வெளியேறுதல்
பைல்ஸ் இருப்பவர்கள் செய்யக் கூடாதவை:
1)கொழுப்பு மற்றும் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
2)பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
3)மைதா போன்ற நார்ச்சத்து குறைவான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
4)பதப்படுத்தபட்ட உணவுகளை உட்கொள்ளக் கூடாது.
பைல்ஸ் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொண்டால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.ஆனால் பாதிப்பு தீவிரமடைந்தால் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அதை குணப்படுத்த முடியும்.
பைல்ஸ் பாதிப்பை சரி செய்ய டிப்ஸ்:
*ஐஸ்கட்டி
ஆசனவாய் பகுதியில் ஐஸ்கட்டி கொண்டு மசாஜ் செய்தால் மூல நோயால் ஏற்படும் அரிப்பு,எரிச்சல் ஆகியவை குணமாகும்.
*எலுமிச்சை சாறு
தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் பருகி வந்தால் பைல்ஸ் பாதிப்பில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.
*ஆலிவ் எண்ணெய்
ஆசனவாய் பகுதியில் ஆலிவ் எண்ணையை அப்ளை செய்தால் பைல்ஸ் புண்கள் ஆறும்.
*கற்றாழை ஜெல்
ஆசனவாய் அரிப்பு மற்றும் எரிச்சலை குணமாக்க பிரஸ் கற்றாழை ஜெல்லை அந்த இடத்தை சுற்றி அப்ளை செய்யவும்.
*உலர் அத்திப்பழம்
*தேன்
தினமும் உலர் அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பாதிப்பு குணமாகும்.
*புதினா இலை
*எலுமிச்சை சாறு
*தேன்
ஒரு தேக்கரண்டி புதினா சாறு,ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் அரை தேக்கரண்டி தேனை ஒன்றாக கலந்து சாப்பிட்டால் பைல்ஸ் பாதிப்பிற்கு தீர்வு கிடைக்கும்.