ஆச்சர்யம் தரும் ஆன்மிகவாதி, மாரடைப்பால் காலமான கவிஞர் பிறைசூடன்!! கடந்து வந்த பாதை!!

Photo of author

By Vijay

நேற்று மாரடைப்பால் காலமான பிறைசூடன் கடந்து வந்த பாதை குறித்து இப்போது காணலாம்.

கவிஞர் பிறைசூடன் தமிழ் திரைப்பட பாடலாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். இதுவரை பிறைசூடன் நான் ஒரு திரைப்படங்களுக்கு ஆயிரத்து 400 க்கும் அதிகமான திரைப் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும் 100 தொலைக்காட்சித் தொடர்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.

சுமார் 5000 பக்தி பாடல்களையும் கவிஞர் பிறைசூடன் எழுதி இருக்கிறார். இவர் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை பெற்றிருக்கிறார். தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தொடைய கலைச்செல்வம் விருதையும், கபிலர் என்னும் விருதையும் கவிஞர் பிறைசூடன் பெற்றிருக்கிறார்.

மிகவும் பிரபலமான “நடந்தால் இரண்டடி” மற்றும் “ஆட்டமா தேரோட்டமா” போன்ற பாடல்கள் மிகவும் வரவேற்பைப் பெற்றவை. இது மட்டுமல்லாமல் நிறைய பக்தி பாடல்களை எழுதியுள்ள பிறைசூடன் மிகச்சிறந்த இலக்கியவாதியும் ஆன்மீகவாதியும் ஆவார். தற்போது 65 வயதாகும் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி குழந்தைகளும் இருக்கின்றது. திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் பிறைசூடன் இருந்து வந்தார். இவரது மகன் தயா பிறைசூடன் தற்போது இசையமைப்பாளராக இருக்கிறார்.

சமீப காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிறைசூடன் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நெசப்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அக்டோபர் 8ஆம் தேதி மாலை நான்கு முப்பது மணி அளவில் உயிரிழந்திருக்கிறார் இது குறித்த தகவலை தயா பிறைசூடன் உறுதிப்படுத்தியுள்ளார்.