குளியலறையில் சிகரெட் துண்டுடன் ஆண்ட்ரியாவின் பிசாசு-2வின் வேற லெவல் ஃபர்ஸ்ட் லுக்!!

0
174

பிசாசு2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் திகில் நிறைந்த கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவருடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், தற்போது பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குளியல் தொட்டியில் சிகரெட் துண்டுடன் ஆண்ட்ரியா இருப்பதுபோல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Previous articleசிவகார்த்திகேயன் யாருடைய பெயரை தன் மகனுக்கு வைத்துள்ளார் தெரியுமா?
Next articleலாஸ்லியாவின் கூகுள் குட்டப்பா படத்தின் ஃப்ர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்ட நடிகர் சூர்யா!!