மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! அதிர்ஷ்டமான நாள்!

0
223
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! அதிர்ஷ்டமான நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். எடுக்கும் முயற்சிகள் எல்லாம் அருமையாக முடிவதால் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும்.

குடும்ப உறவு இன்று சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவினர்கள் மூலம் சில நன்மைகள் கிடைக்கப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு ஆனந்தமான சூழ்நிலைகள் உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோசமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

Previous articleகும்பம் – இன்றைய ராசிபலன்!! தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆற்றல் அதிகரிக்கும் நாள்!
Next articleதொடர்ந்து இருமல் வருகின்றதா? எச்சரிக்கை இந்த நோய்க்கு வழிவகுக்கும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here