மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பும் கலகலப்பு உண்டாகும் நாள்!!
மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பு உண்டாகும் நாள். காலையில் சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரு சலசலப்புடன் காணப்படுவீர்கள். மாலையில் விளங்குவதால் கலகலப்பு வந்து சேரும். குடும்ப உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் எழாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வாகன பயணங்களில் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.
வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆக்கலாம். உத்தியோகத்தில் வீண் பழி வந்து சேரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டணிகளையும் வாடிக்கையாளர்களும் அனுசரித்து செல்வது அவசியம்.
அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக இருக்க வேண்டும். கவனமாக செயல்படுவது மிக முக்கியம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தென்படும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு நாட்டு மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் சற்று தடை தாமதத்தை காண்பார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நநறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.