நீண்ட பட்டுப்போல் பளபளப்பான கூந்தல் வேண்டுமா? அப்போ  நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!

0
191
#image_title

நீண்ட பட்டுப்போல் பளபளப்பான கூந்தல் வேண்டுமா? அப்போ  நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்! 

முடி வளர்ச்சிக்கு பாரம்பரியமான பொருள்கள் எப்போதுமே கைகொடுக்கும். சிகைக்காய் பொடியை கூந்தலில் தேய்த்து குளித்து பிறகு அதன் தூளை வெளியேற்றி கூந்தலை உலரவிடுவதை விட நுரைக்க நுரைக்க ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி கண்டிஷனர் போட்டு கூந்தலை காயவைப்பதே ஈஸி என்பவர்கள் முடி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் மீண்டும் பாரம்பரிய பொருளுக்கு திரும்பலாம்.

அவசர காலத்தில் இதையெல்லாம் பயன்படுத்த முடியாது என்பவர்களுக்கு எளிமையான முறையில் சிகைக்காய் ஹேர் மாஸ்க் எப்படி பயன்படுத்துவது இதன் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

முடிக்கு இயற்கையான பராமரிப்பை கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் சிகைக்காய் தேர்வு செய்யலாம். அதிலும் இதனுடன் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் பொருள்களை சேர்த்து பயன்படுத்தும் போது முடி வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியமாக இருக்கும். சிகைக்காய் ஹேர் மாஸ்க் தயாரிப்பு முறை குறித்தும் அதன் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.

 

சிகைக்காய் ஹேர் பேக்

தேவை

சிகைக்காய் – 100 கிராம்
நெல்லி பவுடர் – 100 கிராம்
கறிவேப்பிலை பொடி – 100 கிராம்

இந்த மூன்றையும் வீட்டிலேயே உலர்த்தி பொடியாக்கி அரைத்து வைக்கவும். மூன்றையும் தனித்தனியே அரைத்து தனி பாட்டிலில் எடுத்து பதப்படுத்தி வையுங்கள். 2 மாதங்களுக்கு ஒரு முறை இந்த பொடியை தயாரித்து வைத்துகொள்ளலாம்.

சிகைக்காய் ஹேர் மாஸ்க் செய்ய

சிகைக்காய், நெல்லி பவுடர், கறிவேப்பிலை பவுடர் – தலா 2 டீஸ்பூன் ( உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ப நீங்கள் அளவை கூட்டியோ குறைத்தோ பயன்படுத்தலாம்)

இதனுடன் சோற்றுக்கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை 10 நிமிடங்கள் வைத்திருங்கள். தண்ணீர் வேண்டாம். தேவையெனில் சாதம் வடித்த கஞ்சி பயன்படுத்தலாம். சிகைக்காய் ஹேர் மாஸ்க் தயார்.

கூந்தலை சுத்தம் செய்து தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் அளவு எடுத்து உச்சந்தலையில் மென்மையாக மசாஜ் செய்து இப்போது இந்த கலவையை கூந்தலில் உச்சந்தலை முதல் வேர் வரை நன்றாக தடவி விடுங்கள். கூந்தலை 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள்.

சிகைக்காய் கண்களில் பட்டால் எரிச்சலை உண்டு செய்யும் என்பதால் கவனமாக பயன்படுத்துங்கள். பிறகு கூந்தலை மந்தமான தண்ணீர் தெளித்து மாஸ்க் உடன் சேர்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் கூந்தலுக்கு ஷாம்பு பயன்படுத்த வேண்டாம். இந்த பேக் உங்கள் கூந்தலில் உச்சந்தலையில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற செய்யும். இதே போன்று மாஸ்க் முழுவதும் வெளியேற்றும் வரை தண்ணீர் சேர்த்து சேர்த்து கூந்தலை கசக்கி விடுங்கள்.

ஷாம்பு வேண்டாம். கண்டிஷனருக்கு சாதம் வடித்த கஞ்சியை கொண்டு கூந்தலில் தடவி 5 நிமிடம் கழித்து கடினமான தண்ணீர் இல்லாமல் அலசி எடுக்கவும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தலாம்.

இந்த சிகைக்காய் ஹேர் பேக் கூந்தலில் இருக்கும் அழுக்கை வெளியேற்றுவதோடு உச்சந்தலை அரிப்பு, பொடுகு, பருக்கள் தொற்றுகள் போன்றவற்றையும் வெளியேற்றும். சிகைக்காய் பயன்பாடு பேன் தொல்லையையும் இல்லாமல் செய்யும். இராசயனம் இல்லாமல் உச்சந்தலையை சுத்தம் செய்வதால் கூந்தல் ஆரோக்கியமாக வளரும்.

நெல்லிக்காய் கூந்தலை இளநரை பிரச்சனையிலிருந்து பாதுகாத்து முடிக்கு ஊட்டமளிக்கும். உச்சந்தலை சருமத்தின் பிஹெச் அளவை பாதுகாக்க உதவும். முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி வெடிப்பு பிரச்சனைகளை தடுக்கும். முடியின் நிறம் செம்பட்டையாக மாறுவதையும் தடுக்கும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி வெயில் படாமல் உலர்த்தி வீட்டிலேயே பொடி தயாரிக்கலாம்.