பிரபல நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!

Photo of author

By Parthipan K

பிரபல நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!

Parthipan K

Updated on:

தமிழ் சினிமா காதல் படத்தின் மூலம்  ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சந்தியா. தற்போது சன் தொலைக்காட்சியில் கண்மணி நாடகத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

காதல் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதைத்தொடர்ந்து தொடர்ந்து டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார் 

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும், 20-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 இவர் 2015ஆம் ஆண்டு குருவாயூரில், வெங்கட் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது ஹேமா வெங்கட் என்ற பெண்குழந்தையும் இவர்களுக்கு உள்ளது.இவர்களது திருமண வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் சென்னையில் பெரு வெள்ளம் வந்ததால் சென்னையில் நடக்க இருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து அந்தப் பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினார் சந்தியா.

திருமணத்துக்குப் பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த சந்தியா சுமார் 4 வருடங்களாக திரைப்படங்களில் தலைகாட்டவில்லை.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்மணி’ தொடரில் கவுரவ தோற்றத்தில் தற்போது நடித்து வருகிறார். அதற்கான புரமோ வீடியோக்களையும் சன் டிவி வெளியிட்டுள்ளது.